V4UMEDIA
HomeNewsKollywoodதீவிர படப்பிடிப்பில் இருக்கும் கெளதம்-சிம்புவின் அடுத்த படம்

தீவிர படப்பிடிப்பில் இருக்கும் கெளதம்-சிம்புவின் அடுத்த படம்

சிம்பு-கெளதம் கார்த்திக் கூட்டணியில் வெளி வர இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நாரதன் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீ முரளி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கன்னட படமான ‘முப்தி’ படத்தின் ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தை இயக்கும் நாரதன் தான் கன்னட படத்தையும் இயக்கினார். ‘முப்தி’ படத்தில் ஒருவர் காவலராகவும் மற்றொருவர் உலக டானாகவும் இருப்பர். இந்தப்படமும் அதே கதையில் தான் எடுக்கப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.நானவேல் ராஜா தயாரிக்கிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கெளதம் கார்த்திக் அவர்கள் அடிக்கடி புகைப்படம் மற்றும் விடீயோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் அண்மையில் கெளதம் மற்றும் சிம்பு இருவரும் படப்பிடிப்பில் இருப்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த பதிவில் அவர், “கடுமையான காற்று, வெப்பம், மழை அல்லது தூசி மேகங்கள், இவை அனைத்தையும் இன்று நங்கள் எதிர்கொண்டு, முன்னோக்கி நகர்கிறோம், # நார்தன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்” என பகிர்ந்துள்ளார்.

Most Popular

Recent Comments