அஜித் படம் ‘கிரீடம் ‘ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இவர் நடிகர் உதயா அவர்களின் தம்பி. இவரது தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆவர். கிரீடம் படத்தை தொடர்ந்து “பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம், தெய்வ திருமகள்,தலைவா, சைவம், தேவி” ஆகிய படங்களை இயக்கியவர். தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு மூன்று வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
தற்போது இயக்குனர் விஜய் அவர்கள், மறுமணம் செய்து கொள்ள போகிறார் இவர் டாக்டரை மணந்து கொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். இது பற்றி அவர் தனது செய்தி வெளியீட்டில்,”வாழ்க்கையின் பயணம் எப்போதுமே தனித்துவமானது. எனது வாழ்க்கையும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி மற்றும் வலி என அனைத்தும் அடங்கியது. ஆனால் இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், அவர்கள் எனது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, எனக்கு உறுதுணையாக இருந்தனர். இப்போது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தொடக்கத்தை எனது நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். டாக்டர் ஆர்.வைஸ்வர்யாவுடன் நடக்கும் எனது திருமணத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். ஜூலை 2019 இல் எங்களது திருமணம் நடக்க போகிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன், நான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.