V4UMEDIA
HomeNewsKollywoodவிவேக்கிற்கு நன்றி கூறிய ஹரிஷ் கல்யாண்!!

விவேக்கிற்கு நன்றி கூறிய ஹரிஷ் கல்யாண்!!

ஜூன் 29 ஆன இன்று ஹரிஷ் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் தமிழில் ‘பியார் பிரேமா காதல் & இஸ்பேட் ராஜாவும் இதய ராணி’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் அண்மையில் தெலுங்கில் ;ஜெர்சி’என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.



இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த புகைப்படத்தை இணைத்ததுடன் அந்த பதிவில் , “இவ்வாறே என் பிறந்த நாளை தொடங்கியுள்ளேன் ! புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் ! விவேக் அவர்களுக்கு நன்றி . உங்கள் நற்பணிகளை பின்பற்றி, இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் அவர்களும் ஹரிஷ் கல்யாணிற்கு பிறந்தநாள் வாழ்குளை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அவர், “நன்றி ஹரிஷ் கல்யாண். உங்கள் பிறந்த நாளில் ஒரு மரம் பிறக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உதவி புரிந்த ட்ரீ பேங்க் இந்தியா முல்லைவனத்திற்கும் மிக்க நன்றி. நாம் இணையும் “தாராளப்பிரபு” வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருந்தார்.

Most Popular

Recent Comments