இயக்குனர் அன்பு இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து கொண்டிருக்கும் படம் ‘வால்டர்’ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இயக்குனர் அன்பு இது பற்றி கூறுகையில், “கெளதம் அவர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். நான் தற்போது அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினால், கதையின் கரு மக்களுக்கு தெரிந்துவிடும். அவரது கருத்தைப் பெற இந்த ஸ்கிரிப்டுடன் அவரிடம் சென்றேன். இந்த குறிப்பிட்ட கதாபாத்திரம் அவருக்கு பிடித்திருந்தது. உடனே அவரிடம் படத்தில் நடிக்குமாறு கேட்டேன், அவரும் ஒப்புக்கொண்டார்” என இயக்குனர் அன்பு கூறினார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது. படத்தில் இடம் பெரும் காதல்காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சமுத்திரக்கனி அவர்களின் காட்சிகள் ஆகியவற்றிற்கு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. கெளதம் அவர்களின் காட்சிகள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தொடங்கும் என இயக்குனர் கூறுகிறார்.