விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்து கொண்டிருக்கும் வரலாற்று யுத்த நாடகத் திரைப்படமான ‘சாய் ரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைத்து நடிக்கிறார். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கோனிடெலா புரொடக்ஷனில் நடிகர் ராமச்சரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது டுவிட்டர் பதிவில், “சைரா படப்பிடிப்பு முடிந்தது !! ஒவ்வொரு உறுப்பினர்களின் கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி .இது ஒரு மறக்கமுடியாத பயணம் !! திரைப்படம் மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், நயன்தாரா, துணை வேடங்களில் தமன்னா பாட்டியா, விஜய் சேதுபதி, சுதீப் மற்றும் ஜெகபதி பாபு நடிக்கின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய நடிகர்களுடன் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது.