விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படம் ‘கொலைகாரன்’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நிறைய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழாவில் புல்லி மூவிஸ் சத்யராம் தயாரிக்கும் படம் “கண்டதை படிக்காதே” இந்த படத்தின் போஸ்ட்டரை நடிகர் “விஜய் ஆண்டனி”, ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் கொலைகாரன் படத்தின் இசையமைப்பாளர் சைமன் கிங் ஆகியோர் வெளியிட்டனர்.
இடை தொடர்ந்து ‘கண்டதை படிக்காதே’ படத்தின் இயக்குனர் ஜோதிமுருகன் கூறுகையில், “இந்த படம் ஹை கான்செப்ட் படம், ஹாலிவுட்டில் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் கொடுக்கும் படங்களை ஹை கான்செப்ட் படம் என கூறுவர். இது போன்ற படங்களில் கதை தான் முதல் ஹீரோ, எந்த ஹீரோ நடித்தாலும் படத்தின் கதை ஆண்ட படத்தை ஹிட் அடித்து விடும். இந்த படம் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த திரைப்பமாக இருக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். இறுதிக் காட்சி வரை சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். நம்மை சீட் நுனியில் அமரவாகும் படம் இது என்று இயக்குனர் கூறினார்.
இந்த படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார், “பான்பராக் ரவி ஆர்யான்” என பெயர் எடுத்த திருப்பாச்சி புகழ் நடிகர், வில்லனாக நடித்திருக்கிறார்.