நடிகர் விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகை அமலா பால் ஜூன் 27 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் விஜய் சேதுபதி அவர்களின் வரவிருக்கும் படத்தில் இருந்து அவராக விலகவில்லை, அவரை விஎஸ்பி33 படத்தை தயாரிக்கும் சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் நீக்கிவிட்டனர் என்றும், இது குறித்து விவாதிக்க எந்த அழைப்பும் அவருக்கு வரவில்லை, மேலும் அவரது படம் வதந்திகளால் நாசப்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த பட்டியலில் அமலாபால் உடன் ‘ராட்ச்சசன்’ படத்தில் இணைந்து நடித்த விஷ்ணு விஷால், அமலா பாலிற்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்தார்.
முதலில் “ஒரு நடிகை இப்படி வெளிப்படையாக பேசுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் … தயாரிப்பாளர்களால் நான் மோசமாக நடத்தப்படும் போது பல முறை இது பற்றி நான் பதிவிட நினைத்தேன், ஆனால் நங்கள் இன்னும் அவர்களுக்கு ஒரு ‘மோதலாளி ‘ என்ற மரியாதை அளிக்கிறோம்.
அவர் தனது இரண்டாவது டுவிட்டர் பதிவில், “நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன, சினிமாவில் நல்ல தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர், ஆனால் எங்களை போன்ற நடிகர்களுக்கு இது போன்று ஏற்படும் அநீதிக்கு எதிராக பேசும் நேரம் இது, என பதிவிட்டிருந்தார்.