V4UMEDIA
HomeReviewDharmaprabhu Review

Dharmaprabhu Review

Review By :- V4uMedia

Release Date :- 28/06/2019

Movie Run Time :- 2.27 Hrs

Censor certificate :- U

Production :- Rockline Productions

Director :- Muthukumaran

Music Director :- Justin Prabhakaran

Cast :- Yogi Babu Janani Iyer Sam Jones Meghna Naidu Karunakaran Ramesh Thilak Rajendran Radha Ravi Azhagam Perumal Bosskey Manobala Rekha

எமதர்ம ராஜாவாக இருக்கும் ராதாரவி, தனக்கு வயதாகி வருவதால் தனது மனைவியின் யோசனைபடி தனது மகனான யோகி பாபுவிடம் பதவி ஏற்குமாறு கேட்கிறார், இதற்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் யோகி பாபு பின்பு பதவி ஏற்க ஒப்பு கொள்கிறார். பின்பு யோகி பாபுவின் சம்மதத்துடன் அடுத்த எமனாக யோகி பாபுவை அறிவிக்கிறார் ராதாரவி

எமனிற்கு அடுத்த பதவியில் இருக்கும் விசித்ரகுப்தரான ரமேஷ் திலக் ராதாரவிக்கு பிறகு எமனாக இவர் தான் இருப்பார் என திட்டம் போடுகிறார். இந்நிலையில் ராதாரவி தனது மகனான யோகி பாபுவை எமனாக அறிவிக்கையில், இந்நிலையில் நாம் தான் அடுத்த எமன் என்று எண்ணிக்கொண்டிருந்த விசித்திர குப்தனான ரமேஷ் திலக் ஆசையில் மண் விழுகிறது.
இதை தொடர்ந்து யோகி பாபுவிடமிருந்து எம பதவியை தட்டி பறிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார் ரமேஷ் திலக். இந்நிலையில் யோகி பாபு எவ்வாறு அவரது பதவியை காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
எமபதிவிகாக போட்டியிடுவது தான் கதையின் சுருக்கம்.

யோகி பாபு எமனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தி இருகிறார். இந்த படத்தில் காமெடி தான் அடித்தளம். யோகிபாபுவின் யதார்த்தமான பேச்சும், அவரது உடலமைப்பும் எமன் கதாபாத்திரத்திற்கான பிளஸ் பாயிண்ட்.

யோகி பாபுவிற்கு அடுத்து திரைப்படத்தில் அதிகம் தோன்றுபவர் ரமேஷ் திலக் இவரது நடிப்பு கனகச்சிதமாக விசித்ரகுப்தருக்கு பொருந்துவது போல அமைந்துள்ளது. முதல் பாதியில் நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியில் படத்திற்கான சுவாரஸ்யம் என படத்தை நன்றாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.

ராதாரவி, ரேகா, மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள் ஆகியோர் அவர்களது வேலைகளை சரிவர செய்கின்றனர். படத்தில் மறைந்த அரசியல் தலைவர்களை வைத்து மீட்டிங் போடும் இடம் அதிலும் கொஞ்சம் நகைச்சுவை இருப்பது என சுவாரஸ்யம் தருகிறது.

படத்தில் இடம் பெரும் வசன வரிகள் தான் படத்திற்கான பலம், இயக்குனர் முத்துக்குமரன் மட்டுமில்லாமல் யோகி பாபுவும் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். யோகி பாபு வின் சில பஞ்ச்கள் படத்தை மெருகேற்றுகிறது. யோகி பாபுவின் நகைச்சுவை வர்ணனையில் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Release Date :- 28/06/2019 Movie Run Time :- 2.27 Hrs Censor certificate :- U Production :- Rockline Productions Director :- Muthukumaran Music Director :- Justin Prabhakaran Cast :- Yogi Babu Janani Iyer Sam Jones Meghna Naidu Karunakaran Ramesh Thilak Rajendran...Dharmaprabhu Review