இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் தனது இசையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் தற்போது தளபதியின் பீகிள் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரின் இசை ஆற்றல் உலகெங்கிலும் அறியப்பட்ட ஒன்று. இவரது மகன் தற்போது 7up மெட்ராஸ் கிக் சீசன் 2 இன் ‘சகோ’ பாடலில் நடடித்துள்ளார். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கான வரிகளை புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேக் மற்றும் ஏ.டி.கே எழுதியுள்ளனர்.
‘சகோ’ நட்பினை பற்றியது இந்த பாடலை ஏ. ஆர். ரஹ்மானின் மகன் ஏ. ஆர்.அமீன் பாடியுள்ளார். இந்த பாடலில் வரும் அமீன் மிகவும் ஸ்டைல் ஆன லுக்கில் தோற்றமளிக்கிறார். இசை புயல் இந்த பாடலில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.