V4UMEDIA
HomeNewsKollywoodநயன்தாரா படத்தில் வில்லனாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்

நயன்தாரா படத்தில் வில்லனாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்

தமிழில் முன்னணிகதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் தமிழில் நடித்து வெளிவந்த படம் ‘Mr. லோக்கல்’. தற்போது இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு வில்லனாக சின்னத்திரை பிரபலம் ‘பிரஜன்’ நடிக்க உள்ளார். பிரஜன் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இவர் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து இருக்கிறார்.

Related image

Most Popular

Recent Comments