விஸ்வாசம் படத்திற்கு பிறகு தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளி வந்து இணையத்தளத்தில் வைரலாக பரவியது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரில் இடம் பெற்ற தல அஜித்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டது. யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசையில் ஜூன் 27 ஆன இன்று “வானில் இருள்” என்னும் முதல் சிங்கிள் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த பாடல் வரிகள் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது.
ட்ரைலரும் படமும் திரைக்கு வரும் முன்பே சமூக ஊடகங்களில் பிரபலமாகிவிட்டது. இந்த பாடலின் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார் மற்றும் தீ (dhee) இந்த பாடலை பாடியுள்ளார். பாடல் ட்யூன் மற்றும் குரல் என ஒருவருக்கொருவர் அழகாக பூர்த்தி செய்கின்றன.
பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இந்த படம் 2019 ஆகஸ்டில் வெளியிடுவதாக கூறப்படுகிறது.