அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அமலா பால் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்தனர் .ஆனால், சரியான தேதிகள் இல்லாத காரணத்தால் அப் படத்திலிருந்து அமலா பால் விலகியதாகச் கூறினார்கள்
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஊட்டியில் தொடங்கியதால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டியதாக இருந்தது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களின் நடிகை மேகா ஆகாஷை உடனடியாக ஒப்பந்தம் செய்து அவரை படப்பிடிப்புக்கு அழைத்தனர் .
இப்படத்தில் நடிப்பது குறித்து மேகா ஆகாஷ் மகிழ்ச்சியடைந்துள்ளார். “மிகவும் உற்சாகமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். உண்மையிலேயே மிக உற்சாகமாக இருக்கிறேன்,” என மேகா தெரிவித்துள்ளார்.















