இயக்குனர் அட்லீ இயக்கத்தில், AGS நிறுவனம் தயாரிப்பில் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் தளபதி விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் மூன்று விதமான போஸ்டர்கள் கடந்த வாரம் படகுழிவினார் வெளியிட்டனர் .
தற்போது ‘பிகில்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை எக்ஸ் ஜென் என்ற நிறுவனமும், யுனைட்டெட் இந்திய எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.
‘2.0’ படத்திற்குப் பிறகு அதிக விலைக்கு வெளிநாட்டு உரிமைக்கு விற்கப்பட்ட படம் ‘பிகில்’தான் என்கிறது சினிமா வட்டாரம். அமெரிக்காவில் இதுவரை வெளிவந்த விஜய் படங்களின் தியேட்டர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமான தியேட்டர்களிலும் அது போலவே மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.