V4UMEDIA
HomeNewsBollywoodதீவிர பேட்மிண்டன் பயிற்சி எடுக்கும் ப்ரனிதி சோப்ரா

தீவிர பேட்மிண்டன் பயிற்சி எடுக்கும் ப்ரனிதி சோப்ரா

புகழ்பெற்ற பூப்பந்து வீரர் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ப்ரினிதி சோப்ரா நடிக்கிறார். இதற்காக அவர் கடுமையாகப் பேட்மிண்டன் பயிற்சி எடுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ப்ரினிதி அடிக்கடி தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார், இவர் சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அந்த பதிவில் “ஒரே ஒரு டேக்கில் பெரிய சீனை எடுக்க தயாராகிறேன்.” என ஆங்கிலத்தில் பதிவிட்டார். மேலும் அவர் #SainaNehwalBiopic, #Goals மற்றும் #OneDayAtATime போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டார்

சில நாட்களுக்கு முன்பு, ப்ரினிதி இன்ஸ்டாகிராமில் பேட்மிண்டன் பயிற்சிக்கு முன்னும் பின்னும் தனது ஆற்றல் அளவைக் காட்டும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தனது ஒப்பீட்டு புகைப்படங்களுடன், அவர் எப்படி கடினமாக பயிற்சி பெறுகிறார் என்று சாய்னா நேவாலிடம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சாய்னா நேவால், தனது வாழ்க்கை வரலாற்றில் ப்ரினிதியைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார். “மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள்,” என அவர் ஒரு இதய ஈமோஜி போட்டு பதிவிட்டார் .

https://www.instagram.com/p/Byz7czdDKyR/?utm_source=ig_web_copy_link​


முன்னதாக, செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் உடனான தனது நேர்காணலில், ப்ரினிதி, சாய்னாவின் உடல் மொழி மற்றும் அவரது விளையாடும் பாணி மற்றும் சாய்னாவின் போட்டிகளைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார். “எனது முழு பயிற்சி குழுவான அமோல் குப்தே சார் மற்றும் எல்லோரிடமிருந்தும் எனக்கு கிடைத்த மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், நான் சாய்னாவின் போட்டிகளைப் பார்க்க வேண்டும். அவருடைய பல பூப்பந்து போட்டிகளை நான் பார்த்ததில்லை, அவர் விளையாடும் விதத்தில் நான் விளையாட விரும்புகிறேன்,” என பதிலளித்தார்.

பூஷன் குமார் மற்றும் திவ்யா கோஸ்லா குமார் தயாரிக்கும் இந்த வாழ்க்கை வரலாறு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments