V4UMEDIA
HomeNewsBollywoodகபீர் சிங் வெற்றியை கொண்டாடும் ஷாஹித் கபூர்!!

கபீர் சிங் வெற்றியை கொண்டாடும் ஷாஹித் கபூர்!!

நடிகர் ஷாஹித் கபூர் தனது சமீபத்திய வெளியீடான கபீர் சிங்கின் வெற்றியைப் கொண்டாடி வருகிறார், இது அவருக்கு அதிகவசூல் கொடுத்த படம் ஆகும்.

படத்தின் ப்ரோமோஷன் முடித்த பின்னர் நடிகர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார் ஷாஹித் கபூர், அவரது மனைவி மீரா ராஜ்புத் செவ்வாயன்று இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான பூமராங் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஷாஹித் மீராவின் கன்னத்தில் முத்தமிடுவதைக் காணலாம், இந்த பதிவிற்கு மீரா ” மேகமூட்டமான நாளில் எனக்கு சூரிய ஒளி கிடைத்தது” என்று ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BzIoA9yFuvC/?utm_source=ig_web_copy_link

படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடும் ஷாஹித்தின் வேடிக்கையான வீடியோவையும் மீரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் சகோதரர் இஷானுடன் யாரும் பார்க்காதது போல் ஷாஹித் நடனமாடுவதைக் காணலாம். மீரா அந்த பதிவில் ‘இன்றைய பார்ட்டி இவருடையது’ (ஷாஹித்) என்று ஹிந்தியில் “ஆஜ் கி பார்ட்டி இன்கி தாராஃப் சே” என தலைப்பிட்டார்.

https://www.instagram.com/p/BzIke1AAZk9/?utm_source=ig_web_copy_link​


கபீர் சிங் ரூ .100 கோடியை நெருங்கி வருவதால் ஷாஹித் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். கபீர் சிங் என்பது வாங்காவின் ஹிட் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக் ஆகும். படம் திரையரங்குகளில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது,

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments