ஒரு அதார் லவ் படத்தில் இருந்து கண் சிமிட்டும் வீடியோ வைரலாகியபோது ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
பிரியா பிரகாஷ் இது பற்றி பேசுகையில், அவர்
சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். இப்போது, அவர் தனது இரண்டு பாலிவுட் திரைப்படங்களான ஸ்ரீதேவி பங்களா மற்றும் லவ் ஹேக்கர் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் இரண்டு திரைப்படங்களையும் பற்றி பேசினார். அதில், “ஸ்ரீதேவி பங்களா, பாலிவுட்டில் எனக்கு முதல் படம். அதைச் பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் இறுதியில் இது ஒரு நல்ல படமாக வெளிவரும். இந்த படத்தின் இரண்டாவது ட்ரெய்லரிலிருந்து எனக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன. ‘லவ் ஹேக்கர்’ உலகில் உள்ள சைபர் கிரைம் பற்றிய குற்றங்களை விவரிப்பது. இவற்றில் மாட்டிக்கொண்ட ஒருவராக நான் நடிக்கிறேன் ” என்று கூறினார்.
சமீபத்தில், இவர் ‘ஃபைனல்ஸ்’ படத்தில் பாடிய பாடலை குறித்து இன்ஸ்டாகிராமில், “ஃபைனல்ஸ் படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! இந்த திரைப்படத்திற்காக நான் ஒரு பாடலைப் பாடியது இதுவே முதல் முறை. இது மிகவும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. மியூசிக் எப்போதுமே என்னுடைய இரண்டாவது காதல். ஆகையால் பாடல் வெளிவரும் போது நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன், தயவுசெய்து தவறுகளை புறக்கணிக்கவும் @ kailasmenon2000 @prarun #sreerekhabhaskaran @iamnareshiyer. ” என பதிவிட்டார்.
இவர் அன்மையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, பாட்டில் க்ரீன் டாப் மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தார். அதில் அவர் மேக்கப் போடாமல் இருந்த இவருடைய புகைப்படம் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.