V4UMEDIA
HomeReviewSilluKaruppatti

SilluKaruppatti

Review By :- V4uMedia Team

Release Date :- 27/12/2019

Movie Run Time :- 2.33 Hrs

Censor certificate :- U

Production :- Divine Productions

Director :- Halitha Shameem

Music Director :- Pradeep Kumar

Cast :- Samuthirakani ,Sunaina ,Nivedhithaa Sathish ,Leela Samson ,Baby Sara , KravMaga Sree Ram , K. Manikandan, Rahul as Maanja

நான்கு காலக்கட்டங்களில் ந(க)டக்கும் காதல் மற்றும் வாழ்வியல் சம்பவங்களை சுவாரஸ்யமாக கூறியிருப்பது தான் இப்படத்தின் ஒன் லைன். பள்ளி பருவத்தில் குப்பைகளை சேகரிக்கும் பதின்பருவ பையனுக்கு ஏற்படும் முதல் ஈர்ப்பு, திருமண வயதில் இருக்கும் மீம் கிரியேட்டர் இளைஞன் ஒருவனின் பயமுறுத்தும் நோயும், அதனிடையே கிடைக்கும் காதல் அனுபவம.

அடுத்த காலக்கட்டமாக  மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி அவரது மனைவி சுனைனா. எப்போதும் வேலை வேலை என மனவியாதிக்கு ஆளாகும் சமுத்திரக்கனி தனது ஆசை எக்கங்களை திரும்பி பார்ப்பாரா என ஏங்கும் மனைவி சுனைனா. பிறகு முதிய வயதில் காதல் மலரும் ஒரு பயணம் என நான்கு விதமான கதைகளை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கிறது சில்லுக்கருப்பட்டி.

விமர்சனம்:இப்படத்தில் நடிப்பை பொறுத்தவரை சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்ன்சன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீ ராம், மணிகண்டன் மற்றும் பேபி சாரா மற்றும் அந்த சிறுவன் உள்ளிட்ட அனைவருமே மிக யதார்த்தமான, நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் சுனைனா, லீலா சாம்சன், நிவேதா சதீஷ் மற்றும் பேபி சாரா என பெண்களின் நடிப்பும் கதாப்பாதிரமும் ரசிக்க வைக்கிறது.

கதையும் & திரைக்கதை வசனங்களும் சுவாரஸ்யமாக நம்மை இழுக்கும் போது, அதை கெடுக்காத விதமான மென்மையான இசையும், யதார்த்த ஒளிப்பதிவும் அருமை. முன்பே சொன்னதுபோல் நான்கு காலக்கட்டங்களில் மனிதர்கள் சந்திக்கும், கடந்துபோகும் உணர்வுபூர்வமான சம்பவங்களை அழகாக படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ஹலிதா ஷமீம். பாராட்டுக்கள் சார்!!! இறுதியாக சில்லுக்கருப்பட்டி, உணர்வுப்பூர்வமான வெற்றி.

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 27/12/2019 Movie Run Time :- 2.33 Hrs Censor certificate :- U Production :- Divine Productions Director :- Halitha Shameem Music Director :- Pradeep Kumar Cast :- Samuthirakani ,Sunaina ,Nivedhithaa Sathish ,Leela Samson ,Baby Sara , KravMaga...SilluKaruppatti