V4UMEDIA
HomeNewsKollywoodலியோ ; தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு

லியோ ; தளபதி 67 பட டைட்டில் அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே மாஸ்டர் என்கிற வெற்றி படத்தை கொடுத்த விஜய், இந்த பக்கம் இரண்டு படங்களை முடித்து விட்டு வருவதற்குள் அந்த பக்கம் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து 500 கோடி வசூலித்த விக்ரம் என்கிற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து ஷங்கர், ராஜமவுலி ஆகியோருக்கு இணையாக பேசப்படும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வாரிசு படத்தை போல ரொம்ப தாமதம் எல்லாம் செய்யாமல் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விபரங்களை உடனே வெளியிட்டனர் அதுமட்டுமல்ல படத்திற்கு சமீபத்தில் துவக்க விழா பூஜையும் நடத்தினார்கள். வழக்கமாக விஜய் படங்களின் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு தாமதமாகும். ஆனால் தற்போது அதையும் முன்கூட்டியே முந்திக்கொண்டு லியோ என்கிற டைட்டிலை அறிவித்துள்ளார்கள்.

இந்த டைட்டில் அறிவிப்பாக வெளியான வீடியோவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் சேர்த்து அறிவித்துள்ளார்கள்.  அதில் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே விஜய்யின் படங்கள் தீபாவளி பொங்கல் என பண்டிகை நாட்களில் தான் பெரும்பாலும் வெளியாவது வழக்கம். ஆனால் இந்தமுறை தீபாவளி பண்டிகையை குறிவைக்காமல் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் தான் இந்த தேதியை அறிவித்துள்ளனர்.

இந்த வருட  பொங்கல் பண்டிகை ரிலீஸாக விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படமும் மோதியது. இதில் தியேட்டர்கள் பிரிப்பதில் ஆரம்பத்திலேயே சிக்கல் ஏற்பட்டு இருவருக்கும் தியேட்டர்கள் சரி பாதியாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.

இதனால் இரண்டு படங்களுக்குமே கிடைக்க வேண்டிய அதிகப்படியான வசூல் கிடைக்க தவறியது அப்படி கிடைப்பதற்கும் தாமதமானது அதனால்தான் நமது படம் வெளியாகும் நாளே ஒரு பண்டிகை நாள் தான் என்கிற நோக்கில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments