V4UMEDIA
HomeGalleryMoviesஅதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை...

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !!

ப்ரைம் வீடியோ  வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான   “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

ப்ரைம் வீடியோ  தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும்  அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்,  ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.

இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.

டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.

“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.

இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,

“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன.  “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர்  என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில்..,

“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.

சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா  கூறுகையில்…,

“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22  மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Link : https://www.youtube.com/watch?v=7dB5ne639ls

Most Popular

Recent Comments