
Review By :- V4uMedia Team
Release Date :- 03/01/2020
Movie Run Time :- 2.52 Hrs
Censor certificate :- U/A
Production :- Pushkar Films
Director :- Sachin
Music Director :- Ajaneesh Loknath and Charan Raj
Cast :- Rakshit Shetty, Shanvi Srivastava, Balaji Manohar, Achyutha Kumar, Pramod Shetty, Madhusudhan Rao
அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்
கதை :செவன் ஆட்ஸ் ,
இயக்கம் :சச்சின் ரவி.,
ஒளிப்பதிவு :கரம் சாவ்லா.
இசை :அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜ் , காலை :உல்லாஸ் ஹேதுர்
ரக்ஷித் ஷெட்டி ,சான்வி ஸ்ரீவத்சவா ,பாலாஜி மனோகர் ,பிரமோத் ஷெட்டி .
இது பீரியட் படம் மாதிரியும் இருக்கும்,சமூகப்படம் மாதிரியும் இருக்கும்.இரண்டும் கலந்த கலவையாகவும் தெரியும்.
ஒரு நாடக கம்பெனி பெரும் புதையலை கடத்திக் கொண்டு வந்துவிட்டதாக ஏழுமலைகளுக்கு எஜமானன் ராமராமா நினைத்துக்கொண்டு அந்த டிராமா கம்பெனியை அவனது கஸ்டடியில் வைத்து சித்ரவதை செய்கிறான். இவனது மனைவிக்கு பிறந்தவன் ஜெயராம் . வேலைக்காரிக்கு பிறந்தவன் துக்காராம் . வப்பாட்டிக்கு பிறந்த மகனை ஜெயராம் போட்டுத்தள்ளினாலும் தள்ளிவிடுவான் என பயந்து அப்பன்காரன் சத்யம் வாங்கிக்கொண்டு மண்டையை போட்டுவிடுகிறான். “எந்த நிலையிலும் தம்பி துக்காராமை போட்டுத் தள்ளிவிடாதே!”செத்துப்போன அப்பனின் நாற்காலியை பிடிப்பதற்காக ஜெயராம்,துக்காராம் இருவரும் தனித்தனியாக சதிகளில் இறங்குவது தனி சப்ஜெக்ட்.
ராமராமா கோட்டைக்குள் ஹீரோ இன்ஸ்பெக்டர் ரக்ஷித் ஷெட்டி புகுந்ததும் ,கூடவே கதாநாயகி சான்வியும் நுழைந்து விடுவார். டூயட் பாட அல்ல .சண்டை போட.! சங்கேத வரிகளை வைத்து புதையலை அடைவதற்கு மூன்று கோஷ்டிகளும் போடுகிற சண்டைதான் படம் முழுமைக்கும்.! நாடக கோஷ்டி தப்பியதா, புதையல் கிடைத்ததா, நாற்காலி சண்டை என்னாச்சு என்பதுதான் கதை.
ஆர்ட் டைரக்டர் உல்லாஸ் ஹேதுர் கடுமையாக உழைத்திருக்கிறார். போட்டிருக்கிற கோட்டை செட், பழைய காலத்து தர்பார் மண்டபம் மாதிரியான அரங்கம் ,பார்,எல்லாமே அட்டகாசம். காஸ்ட்யூம்ஸ் சூப்பர். கதாநாயகனுக்கு படம் முழுவதும் ஒரே டிரஸ்தான்.