தமிழில் தெறி, மெர்சல், பிகில் எனத் தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் அட்லி. இதன் பலனாக இவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜவான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்துள்ள நிலையில் இந்த ஜவான் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. இந்த படம் ஏற்கனவே ஜூன் இரண்டாம் தேதி வெளியாவதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நிறைவடைய காலதாமதம் ஆகும் என்பதால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 7க்கு மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.