குடும்ப உறவுகளின் வலிமையை பற்றி உணர்த்தும் ஜனரஞ்சகமான படமாக உருவாக உள்ளது. எதார்த்தமான கதை தேர்வில் தற்போது கவனம் ஈர்த்து வரும் சசிகுமாரின் அடுத்த படத்தில் பரத், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
மேகா ஷெட்டி, மாளவிகா இருவரும் இப்படத்தின் மூலம் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இப்படத்திற்கு எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள, சுந்தர பாண்டியன், கொடிவீரன், அயோத்தி ஆகிய படங்களின் வெற்றி வரிசையில் மீண்டும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.
பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் இரா.சரவணன் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய M.குரு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இணை தயாரிப்பாளராக விஜயகுமார் அவர்களுடன் இணைந்து, 30 வருடங்களாக திரைத் துறையில் நிர்வாக தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் பணியாற்றிய தர்மராஜ் வேலுச்சாமி அவர்கள் பெரும் பொருட்செலவில் இப்படத்தை ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன் படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
படக்குழுவினர் பற்றிய மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.