Home News Kollywood 2-வது வாரத்தில் வெற்றி நடைபோடும் ‘லால் சலாம்’!

2-வது வாரத்தில் வெற்றி நடைபோடும் ‘லால் சலாம்’!

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளான மகளும் இயக்குனருமான திரு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது.

படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் குடியரசு தினத்தன்று நடைபெற்றது.இவ்விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிகை ஜீவிதா மற்றும் அவரது கணவர் ராஜசேகர், அவர்களது மகளும் தெலுங்கு நடிகையுமான ஷிவானி ராஜசேகர்,நிரோஷா,தம்பி ராமையா விவேக் பிரசன்னா,தன்யா பாலகிருஷ்ணா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

விழா நாயகன் ஏ ஆர் ரகுமான் நிகழ்வில் கலந்து கொண்டார்.தேர் திருவிழா பாடலானது மேடையில் சங்கர் மகாதேவன் மற்றும் மணி அவர்களது குரலில் ஒலிக்க, மேடையில் பாடி சிறப்பு செய்தனர். நிகழ்வில் தம்பி ராமையா பேசும்போது, இந்த படம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தை பற்றி பேசுவதாக கூறினார். விவேக் பிரசன்னா பேசும் பொழுது, ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்து விட்டதாகவும் இரண்டாவது முறையாக அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். தங்கதுரை பேசும்பொழுது ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்று கூறினார். அதேபோல நடிகை ஜீவிதா ராஜசேகர் அவர்கள் பேசும் பொழுது நீண்ட வருடங்களுக்கு பிறகு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். நிரோஷா அவர்கள் பேசும்பொழுது 80-களில் நடித்துக் கொண்டிருந்த நான் தற்போதும் கூட இந்த தலைமுறை நடிகர்களுடனும் இயக்குனர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,”இது எல்லோருக்கும் முக்கியமான மேடை. எனக்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணுவை ‘3’ படத்துலேயே தெரியும். அவர்தான் இந்தப் படத்தின் கதையை எனக்குச் சொன்னார். கதைக்காக பலரை சந்தித்தேன். பிறகு அப்பா ஷோ-ரீல் பார்த்தார். அதுக்குப் பிறகுதான் இந்த படத்துக்குள்ள வந்தார். அவர் என்னிடம் ‘இந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தால் எப்படி இருக்கும்’னு கேட்டார். அதன் பிறகுதான் இந்த படமே உருவானது.

‘அவங்க என்னப்பா பெரிய ஆளு அவங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடும்’ என்று பேசினார்கள்.ஆனால்,அப்படியெல்லாம் இல்லை. மத்தவர்களுக்குக் கூட சுலபமாக கிடைக்கும். நான் அப்பாவை பார்த்துக் கொண்டதை விட, ரசிகர்கள் அப்பாவை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். ரஹ்மான் சாரிடம் பழகிட்டு விட்டு வந்தால் வாழ்க்கையோட தத்துவங்கள் தெரியும். அவ்வளவு குழந்தைத்தனமாக இருப்பார்.

என்னுடைய குழந்தைகள் எனக்கு கிடைச்ச பெரிய வரம். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நான் அவர்களிடம் குறைவான நேரம்தான் செலவிட்டேன். அவர்களும் அதைப் புரிந்து கொண்டார்கள். பெரியவர் பொறுப்பா பேசுவார். சின்னவர் ஒரு விமர்சகர். மகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அப்பாவாக வந்து பணம் கொடுக்கலாம். ஆனால், என் அப்பா படம் கொடுத்திருக்கார். வாழ்க்கை கொடுத்திருக்கார். எப்பவும் எனக்கு அவர்தான் முதன்மை. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தில் நடிக்க முடியும். அந்த தைரியம் அவருக்கு மட்டுமே உள்ளது. நான் கர்வமாகச் சொல்வேன், யாரும் அதை செய்ய மாட்டார்கள். நீங்கள் இந்து,கிறிஸ்துவர்,இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீர்கள்”,என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அப்போது பேசிய ரஜினி  அவர்கள்,”என்னுடைய நண்பர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவாதாரிணி அகால மரணமடைந்திருக்கிறார்,என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த், கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அவருடைய மறைவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிவப்புக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு,அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவார்கள்,வன்முறைக்கும் பயன்படுத்துவார்கள்,புரட்சிக்கும் பயன்படுத்துவார்கள்,ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும்னு என் மகள் சொன்னார். அதுக்குப் பிறகு விருதுக்காக நான் கேட்கமாட்டேன்னு சொல்லிவிட்டேன். அதன் பிறகு இது உண்மை கதை சொன்னார். பிறகுதான் அந்தக் கதையை கேட்டேன்.`ரஜினிகாந்த்தே இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார்னு நிறைய பேர் கூறினார்கள். பாபா படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லன்னு நிறுத்திவிட்டேன். நான் ஐஸ்வர்யாவிடம், நானே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்’னு என்று கூறினேன்.

 மத நல்லிணக்கம் குறித்து இந்தப் படம் முக்கியமாக பேசுகிறது. இந்தப் படத்தில் செந்திலுக்கு நல்ல கதாபாத்திரம். செந்திலுக்கு எப்போதும் கவுண்டமணி அடிக்கடி போன் செய்வார். அப்போ ஒரு முறை ஷூட்டிங்ல போன் பண்ணும் போது யார் ஷூட்டிங்ன்னு கேட்டிருக்கார். ரஜினினு செந்தில் சொன்னதும் ‘அவனே முழுசா காமெடி பண்ணிடுவான், நீ எதுக்கு’னு கேட்டிருக்கார். காக்க கழுகு கதை வேறு விதமாக எடுத்துக்கொள்ளப் பட்டுவிட்டது. ‘இவர் விஜய்யை சொல்கிறார்’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அது ரொம்ப வருத்தமாக இருந்தது. விஜய் தனது உழைப்பால் இந்த உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். இப்போது சமூக சேவைகள் நிறைய செய்து கொண்டிருகிறார். விஜயை எனக்கு போட்டின்னு நினைத்தால், எனக்கு மரியாதை, கெளரவம் இல்லை. அதே மாதிரிதான் அவருக்கும்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பாக இசையமைத்துக் கொடுத்துள்ளார். கிரிக்கெட் தொடர்பான  இந்தக் கதையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

இந்நிலையில் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.நேற்று முதல் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.