HomeNewsBollywood'அனிமல்' திரைப்பட குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘அனிமல்’ திரைப்பட குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

பூஷன் குமார், கிரிஷன் குமார் அவர்களின் டி சீரிஸ், முராத் கெடானி அவர்களின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், உருவாகி இருக்கும் “அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, 2023-அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  

நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது..
மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல்,ஆனால் மிக அழுத்தமான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிகவும் தெளிவானவர்.நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த  டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் விக்ரம்,ஜெயிலர் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் மகிழ்விக்கத்தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.  

நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம்.  நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் அழுத்தமான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய  வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை  நான் செய்ததில் மிகவும் அழுத்தமான  கேரக்டர் இந்தப்படம் தான். நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி.

நடிகர் பாபி தியோல் பேசியதாவது..
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும்.  அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும்.  சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டை போட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது,
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் பிரனாய் ரெட்டி வங்கா கூறியதாவது..
சந்தீப் மிக அழுத்தமானவர்  என்பதால் அவருக்கு அழுத்தமான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக  வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம்  டிசம்பர்-1-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments