V4UMEDIA
HomeNewsKollywoodயு/ஏ சான்றிதழ் பெற்ற லியோ

யு/ஏ சான்றிதழ் பெற்ற லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் லியோ. கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த படம் தயாராகி வந்தபோதே அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் என முன்கூட்டியே தேதியை அறிவித்து ஆச்சரியப்படுத்தினர். அதற்கேற்றபடி படப்பிடிப்பையும் விறுவிறுப்பாக முடித்து சமீபத்தில் தணிக்கை வாரியத்திற்கு சென்சார் சான்றிதழ் பெற அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

வழக்கமான விஜய் படம் போல இல்லாமல் இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களும் இணைந்துள்ளனர். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை திரிஷா.

பாலிவுட் நடிகை சஞ்சய் தத், நடிகர் அர்ஜுன் ஆகியோர் முதன்முறையாக விஜய் உடன் இணைந்து நடித்துள்ளனர். கௌதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Most Popular

Recent Comments