மாநகரம் படத்தின் மூலம் நம்பிக்கை தரும் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்தவர் நடிகர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருகிறார். கடந்த 2017ல் பிரபல தயாரிப்பாளர் சி.வி குமார் ஒரு இயக்குனராக மாறி இயக்கிய மாயவன் என்கிற சயின்ஸ் பிக்ஸன் படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார்.
அந்த படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இந்த படத்தையும் சிவி குமார் தான் இயக்குகிறார் அதேசமயம் இந்த படம் தெலுங்கில் புராஜெக்ட் Z என்கிற பெயரில் உருவாகிறது. இதற்கான துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றுள்ளது.