எண்பது தொண்ணூறுகளில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களாக கொடுத்தவர் நடிகர் மோகன். 90களின் ஆரம்பத்திலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. இடையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்று இரண்டு படங்களின் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது ஹரா என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன். தாதா 87, பவுடர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி உள்ளது.
தற்போது ‘படைத்தலைவன்’ என்கிற இரண்டாவது பாடலை மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்கள். இரண்டே நாட்களில் 13 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் இந்தப்பாடலை கண்டு ரசித்துள்ளனர். ‘படைத்தலைவன்’ பாடலுக்கு உலகம் முழுவதும் மகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.