HomeNewsKollywoodஉலக பட்டினி தினத்தன்று பசி போக்கும் பணியில் களமிறங்க தயாராகும் விஜய் மக்கள் இயக்கம்

உலக பட்டினி தினத்தன்று பசி போக்கும் பணியில் களமிறங்க தயாராகும் விஜய் மக்கள் இயக்கம்

தமிழ் சினிமாவில் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். அதேசமயம் தனது ரசிகர்களை மக்களுக்கான நற்பணியில் திசை திருப்பி விடும் விதமாக ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் களப்பணி செய்ய உற்சாக தூண்டுதல் அளித்து வருகிறார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் வரும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் அன்றைய தினத்தில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பல பகுதிகளில் விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.

அதுமட்டுமல்ல புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் இதேபோன்று அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்க இருக்கிறார்கள். இந்த தகவலை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments