V4UMEDIA
HomeNewsKollywoodபாடல் படப்பிடிப்பில் ராம்சரண் பிறந்தநாளை கொண்டாடிய ஷங்கர் -  பிரபுதேவா

பாடல் படப்பிடிப்பில் ராம்சரண் பிறந்தநாளை கொண்டாடிய ஷங்கர் –  பிரபுதேவா

இயக்குனர் ஷங்கர் தற்போது ஒரு பக்கம் கமல் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தையும் இன்னொரு பக்கம் தெலுங்கில் ராம்சரண் நடித்துவரும் அவரது 15 வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த இரண்டு நடிகர்களின் கால்சீட்டுக்கு ஏற்ப இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மாறி மாறி நடத்தி வருகிறார் ஷங்கர்.

அந்த வகையில் சமீப நாட்களாக ஹைதராபாத்தில் ராம்சரண் நடிக்கும் பாடல் காட்சி ஒன்றை பாடமாக்கி வந்தார் ஷங்கர். இந்த பாடலுக்கு இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படம் ஆஸ்கர் விருது பெற்ற நிலையில் அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஹைதராபாத் திரும்பிய ராம்சரண் இந்த பாடல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த பாடல் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதுமட்டுமல்ல அன்றைய தினமே ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் படக்குழுவுடன் சேர்ந்து உற்சாகமாக ராம்சரணின் பிறந்த நாளை இயக்குனர் ஷங்கர், பிரபுதேவா உள்ளிட்டோர் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.

Most Popular

Recent Comments