V4UMEDIA
HomeNewsKollywoodபஹீரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் ? பிரபுதேவா விளக்கம்

பஹீரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் ? பிரபுதேவா விளக்கம்

ஜிவி பிரகாஷ் நடித்த திரிஷா இல்லைனா நயன்தாரா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத்தொடர்ந்து சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வரவேற்பு பெறவில்லை. மேலும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தான் பிரபுதேவா நடிப்பில் பஹீரா என்கிற படத்தை இயக்கத் துவங்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் தற்போது வரும் மார்ச் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கிட்டத்தட்ட ஏழு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடித்தது குறித்து இயக்குனர் பிரபுதேவா சமீபத்தில் கூறியபோது, “இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோது இதற்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அவரது முந்தைய படங்களை பற்றி நான் யோசிக்கவில்லை. அதை பற்றி கவலைப்படவும் இல்லை. அவரிடம் இருந்து திறமையை மட்டும் தான் நான் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்று கூறியுள்ளார்.

பஹீரா படத்தை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments