மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வரும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேதங்களில் சரத்குமார், பிரேம்ஜி, ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ராம்கி ஒப்பந்தமாகியுள்ளார். எண்பதுகளின் இறுதியில் இருந்து ஹீரோவாக நடித்த ராம்கி இரண்டாயிரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
அப்படி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவரை 10 வருடம் கழித்து தான் இயக்கிய பிரியாணி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அழைத்து வந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த பத்து வருடங்களில் ராம்கி தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின.
இந்த நிலையில் 10 வருடங்கள் கழித்து மீண்டும் தான் தற்போது இயக்கி வரும் கஸ்டடி படத்தில் ராம்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்து வருகிறார் வெங்கட் பிரபு.