மணிரத்தினம் இயக்கத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமான உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தான் உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. காரணம் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் எப்போது திரைப்படமாக வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு பல வருடங்களாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

அதற்கு ஏற்றாற்போல் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என கலர்ஃபுல்லான நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 3௦-ம் தேதி இந்தப்படம் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும்போது உலகெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விதமாக தங்களது புரோமோஷன் பயணத்தைத் துவக்கியுள்ளது. அதன் முதல் நிகழ்ச்சியாக கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதற்காக இயக்குனர் மணிரத்தினம் தலைமையில் நட்சத்திரங்கள் விமானத்தில் கிளம்பிச் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் படத்தை பொறுத்தவரை மலையாள திரையுலகில் இருந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுக்கும் நன்கு அறிமுகமான ஜெயராம், ரகுமான், பாபு ஆண்டனி மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.