தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக கதாநாயகியாக ஸ்திரமான ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இன்னொரு பக்கம் நடிகை என்பதற்கு முன்னதாகவே அவருக்கு பாடகி என்கிற முகமும் இருப்பது பலருக்கு தெரியும். அவர் பாடினாலே பாடல்கள் சூப்பர் ஹிட் என்று சொல்லும் விதமாக, சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தாவுக்காக அவர் பாடிய ஓ சொல்றியா மாமா பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்த நிலையில் தற்போது நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இணைந்து நடித்து வரும் வெப் என்கிற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா.
ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்துள்ள பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூண்.
அதற்கேற்றபடி, “வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டை. வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆடலாம் ஹை.. இரவு முடியும் வரை நீ ஆடு” என்கிற பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா. இந்த பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். இந்த பாடல் ஐடியில் பணிபுரியும் இளைஞர்களை நிச்சயமாக குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.