V4UMEDIA
HomeNewsKollywoodதுல்கர் சல்மான் படத்தை கொண்டாட முடியாதே ; ரசிகர்களின் வருத்தமும் ஏக்கமும்

துல்கர் சல்மான் படத்தை கொண்டாட முடியாதே ; ரசிகர்களின் வருத்தமும் ஏக்கமும்

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவரது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று அவர்கள் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம். இன்னொன்று முதன்முதலாக அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம். இந்த இரண்டையும் செய்து விட்டால் அவர்களுக்கு மிகப்பெரிய கமர்சியல் அந்தஸ்தும் தானாகவே வந்துவிடும்.

நடிகர் துல்கர் சல்மான் இந்த இரண்டு விஷயங்களில் இன்னும் இதுவரை டபுள் ஆக்சன் ரோலில் நடிக்கவில்லை. அதேசமயம் தற்போது முதன்முறையாக சல்யூட் என்கிற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்..

ஜோதிகா நடித்த 36 வயதினிலே என்கிற படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தை இயக்கியவர் என்பதால் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதனால் தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்து கொண்டாட துல்கரின் ரசிகர்கள் தயாராகி வந்தனர்.

அதற்கேற்ற மாதிரி துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான அவரது குரூப் மற்றும் ஹே சினாமிகா ஆகிய படங்கள் தியேட்டரில் தான் வெளியாகின. ஆனால் தற்போது சல்யூட் திரைப்படம் மார்ச் 18ம் தேதி வெளியாகும் என சந்தோச அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தாலும் இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடி தளத்தில்தான் வெளியாகிறது என்றும் அறிவித்துள்ளனர்..

இதனால் கொண்டாட்ட மனநிலையில் இருந்த துல்கர் சல்மானின் ரசிகர்கள் தியேட்டரில் தங்களது அபிமான நடிகரின் படத்தை கொண்டாடி மகிழ முடியாமல் போய்விட்டதே என தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Most Popular

Recent Comments