HomeNewsதெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் அனிகா சுரேந்திரன்!

தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் அனிகா சுரேந்திரன்!

நடிகை அனிகா சுரேந்திரன் தெலுங்கில் புட்ட பொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அனிகா, தற்போது கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார். அதையடுத்து ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ வெப்சீரிஸில், இளம் வயது ஜெயாலலிதாவாக  நடித்து கலக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அனிகா புதிய தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். மலையாளத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மேத்தியூ ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக் ‘புட்ட பொம்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆக உள்ளது. அந்தப் படத்தின் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில் நாகார்ஜுனா உடன் ஒரு புதிய படத்திலும் அனிகா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments