HomeReviewMaster Movie Review

Master Movie Review

Review By :- V4u media

Release Date :- 13/01/2021

Movie Run Time :- 3 Hrs

Censor certificate :- U/A

Production :- XB Film Creators , Seven screen stdio

Director :- Lokesh Kanagaraj

Music Director :- Anirudh

Cast :- Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das, Gouri G. Kishan,Azhagam Perumal,Sriman,Srinath,Sanjeev,Dheena,Ramya Subramanian,Sai Dheena,Poovaiyar & others

படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் அர்ஜுன் தாஸ், பூவையார், மகேந்திரன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளனர். சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா, கௌரி, கலக்க போவது யாரு தீனா மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன் ஆக வரும் சினிமாவாலா சதீஷ், மகாநதி ஷங்கர், ரமேஷ் திலக் என தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து திரையரங்கில் பார்க்கின்றனர்.

படத்தின் இறுதி காட்சியில் தளபதி விஜய் சட்டையின்றி வெறும் உடம்புடன் நின்று, விஜய் சேதுபதியை அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. 43 வயது தாண்டியும் உடம்பை இவ்வளவு இளமையாக பார்த்து கொள்வது மிகவும் கடினம் தான்.

ஆக்சன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் உள்ளன. பஸ் பைட், மெட்ரோ ட்ரெயின் பைட், பார் பைட், கல்லூரியில் நடக்கும் பைட், ரையின் பைட், ஓப்பனிங் பைட், படத்தின் இறுதி பைட், கபடி பைட் என அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் செம்மையாக உள்ளன.

கல்லூரி பேராசிரியரான தளபதி விஜய் மதுவுக்கு அடிமையாகி எந்த நேரம் என்றாலும் போதையுடன் பணி செய்து கொண்டிருப்பதால் அந்த கல்லூரி நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் மாஸ்டராக மூன்று மாதங்களுக்கு நியமனம் செய்யப்படுகிறார்.

அந்தப் பள்ளி வில்லன் விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் அங்கு உள்ள சிறுவர்களை போதைக்கு அடிமையாகி சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒரு கட்டத்தில் விஜய் கண்டுபிடிக்கிறார்.

Master movie hd Stills

அதன் பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையில் நடக்கும் மோதலும் விஜய் சேதுபதியின் கொட்டத்தை விஜய் எப்படி அடக்கினார் என்பது தான் மாஸ்டர் படத்தின் மீதி கதை.

தளபதி விஜய் வழக்கம் போல் ஒரு மாஸ் ஹீரோவாக ஜேடி என்னும் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் விஜய் கிடைத்த இடத்தில் சரியாக ஸ்கோர் செய்கிறார். அதேபோல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த பிறகு அவருடைய மாஸ் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் ஆரம்பமாகின்றன.

Master movie hd Stills

பவானி என்ற கொடூரமான வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். கிட்டத்தட்ட விஜய்க்கு இணையான கேரக்டர் என்பதும் அவருடைய வழக்கமான பாணியிலான நய்யாண்டி மற்றும் நக்கலான நடிப்பும் அவரது கேரக்டரை மெருகேற்றுகிறது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் அர்ஜுன் தாஸ், பூவையார், மகேந்திரன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளனர். சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா, கௌரி, கலக்க போவது யாரு தீனா, சதீஷ், தீனா, மகாநதி ஷங்கர் என தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

Master movie hd Stills

வாத்தி காமிங் பாடலில் தளபதி பட்டையை கிளப்பியுள்ளார். இமத வயசிலும் அப்படி ஒரு ஆட்டம்.

மொத்தத்தில் மாஸ்டர் படத்தை இந்த பொங்கலுக்கு குடும்பத்தினருடன் கண்டு கழிக்கலாம் திரையரங்கில். மாஸ்டர் – வெற்றி 👍

Previous article
Next article
- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments

Review By :- V4u media Release Date :- 13/01/2021 Movie Run Time :- 3 Hrs Censor certificate :- U/A Production :- XB Film Creators , Seven screen stdio Director :- Lokesh Kanagaraj Music Director :- Anirudh Cast :- Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea...Master Movie Review