V4UMEDIA
HomeNewsKollywoodவேலுநாச்சியார் வேடத்தில் நடிக்கவில்லை - நயன்தாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

வேலுநாச்சியார் வேடத்தில் நடிக்கவில்லை – நயன்தாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியார் குறித்த வரலாற்று படத்தில் தான் நடிக்கவில்லை என நயன்தாரா இன்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் ஜான்சி ராணி போல தமிழகத்தில் வீரத்துடன் போரிட்டவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் ‘திருட்டு பயலே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் வேலுநாச்சியாராக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை நயன்தாரா, தான் வேலுநாச்சியர் குறித்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவ்வாறாக வெளியான தகவலில் முற்றிலும் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நயன்தாரா விளக்கம் அளித்துள்ள நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments