V4UMEDIA
HomeNewsKollywoodசாந்தனு நடிக்கும் "முருங்கைக்காய் சிப்ஸ்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

சாந்தனு நடிக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் சாந்தனு. தளபதி விஜய்யுடன் “மாஸ்டர்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சாந்தனு தற்போது சிம்புதேவன் இயக்கி வரும் ‘கசடதபற’ மற்றும் விக்ரம் சுகுமாறன் இயக்கி வரும் ‘ராவண கூட்டம்’ என 2 படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாக்யராஜூடன் அவரது மகன் சாந்தனு இணையும் திரைப்படம் ‘முருங்கைக்காய்’ .

Image
சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜ் நடிக்கவுள்ளார். மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா என பலர் நடிக்க உள்ளனர்.

தரண் குமார் இசையமைக்க மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்தை லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். லாக்-டவுன் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments