பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் சுமார் தான் என்றாலும் உலகளவில் வசூல் வாரி குவித்தது.
தற்போது பிரபாஸ் நடித்து கொண்டிருக்கும் ‘பிரபாஸ் 20’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.