Review By :- V4uMedia Team
Release Date :- 09/01/2020
Movie Run Time :- 2.4 Hrs
Censor certificate :- U/A
Production :- Lyca Productions
Director :- AR Murugadoss
Music Director :- Anirudh
Cast :- Rajinikanth ,Nayanthara . Nivetha Thomas, Suniel Shetty ,Yogi Babu,Prateik Babbar , Nawab Shah, Sriman ,Dalip Tahil, Jatin Sarna ,Shamata Anchan , Raneesh Thyagarajan
மும்பையில் ட்ரக் மயமாகவும், பெண்கள் கடத்தலும் அதிகமாக இருக்க மறுபுறம் போலிஸ் மீது பயமில்லாமல் போகிறது. இந்நிலையில் டெல்லியில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் ஆதித்யா அருணாச்சலம்(ரஜினிகாந்த்) மும்பை கமிஷனராக டிரான்ஸ்ஃபர் ஆகிறார். வந்த வேகத்திலே மும்பையை தன் கட்டுக்குள் கொண்டு வருகிறார், மேலும் ஹைலைட்டாக வில்லனுடன் மகனும் கொல்லப்படுகிறார். இதுக்கு பிறகு என்ன ஹீரோ – வில்லன் ரிவெஞ்சான விளையாட்டே மீதிக் கதை.
விமர்சனம்: நீண்ட வருடங்களுக்கு பிறகு போலீஸ் பாத்திரத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், இந்த மனிதரை பொறுத்தவரை வயது என்பது வெறும் நம்பர் தான், அந்த அளவு எனர்ஜியான நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி என அதகலப்படுத்துகிறார். (உதாரணமாக சும்மாக் கிழி பாடலும், இரண்டாம் பாதியில் வரும் மாஸான சண்டைக் காட்சியும்). ஹீரோவையடுத்து படத்திற்கு பலம் சேர்க்கும் கதாப்பாத்திரமாக பார்த்தால் நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபுவும் தான், இதில் ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சியில் மிகவும் கவனிக்க வைக்கிறார்.
கதாநாயகியான நயன்தாராவிற்கு சொல்லும்படியாக பெரிய (அ) முக்கிய காட்சிகளோ படத்தில் இல்லை. கதாநாயகி என்ற பெயருக்காகவும், முதல் பாதியை நிரப்புவதர்காகவும் நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதேபோல் குறைந்த நேரமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி, வில்லனுக்கான உருவமைப்பு இருந்தாலும் பெரிதாக அவரை காட்சிப்படுத்தவில்லை. அவரின் கதாப்பாத்திரத்திற்கு வெயிட் காட்டாமல் வெறும் சஸ்பென்ஸாகவே மட்டும் வைத்துள்ளனர்.
இப்படத்திற்கு நடிகர்களை போலவே டெக்னீஷியன்கள் பக்கமும் கூடுதலான கவனம் பெற்றுள்ளனர். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ், அனிருத் பின்னணி இசை(இரைச்சல் இருந்தாலும்) என அனைவரும் கவனம்
பெறுகின்றனர். இவர்களை விட ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்(ராம் லக்ஷ்மன்) மற்றும் அவரது குழுவினருக்கு பெரிய கைத்தட்டல், ஏனெனில் படத்தை தாங்கிப் பிடிப்பதே சண்டைக் காட்சிகள் தான். . இறுதியாக தர்பார், சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.