சில ஆண்டுகளுக்கு முன், கவுண்டமணி, சந்தானம் படங்களில் நடிக்கும் போது அவர்கள் ஹீரோக்களுக்கு இணையான அளவுக்கு காட்சிகளில் இடம்பெறுவர். அதன்பின்னர் வரும் காமெடி நடிகர்களில் தற்போது யோகி பாபு அந்த இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது யோகி பாபு நிறைய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இடம் பெரும் காட்சிகள் படங்களுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தருகிறது. இவர் சில படங்களில் ஹீரோவாக கூட நடித்து வருகிறார், அந்த வரிசையில் ‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்கா’ ஆகியன. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘அசுரர் குரு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இன்றி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இதில், மஹிமா நம்பியார் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கிறார். ‘சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே, பெரிய விஷயம் என்றால் கிடைத்த வாய்ப்பை, சரியாக பயன்படுத்துவது தானே, புத்திசாலித்தனமான விஷயம்’ என்கிறது, யோகி பாபு தரப்பு.