77 வயதான பிரிட்டிஷ் மனிதர் பெர்னார்ட் சானிங் தாய்லாந்தில் விடுமுறையில் இருந்தார், சமீபத்தில் வெளியான ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ படத்தை பார்க்க முடிவு செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் படம் பார்க்கும் போது இறந்துவிட்டார் படம் முடிந்து விளக்குகள் எரியும் வரை அருகில் அமர்ந்த பெண் கூட அவரை கவனிக்கவில்லை.

அவர் இறந்துவிட்டதாக அந்தப் பெண் கண்டுபிடித்தபோது, அவர் கூச்சலிட்டு அவசர சேவைகளை உதவிக்கு அழைத்தார். அந்த நபர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவசர சேவைகள் அவரது உடலை மூடி பின்னர் ஆம்புலன்சில் ஏற்றின.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் அவர அருகில் இருந்த பெண் மிகவும் பயந்து போய் இருந்தார்.உள்ளூர்வாசி மந்திரா பெங்ராட் இந்த சம்பவத்தை விவரித்து கூறினார்: “நுழைவாயிலில் சில ஊழியர்கள் சினிமா பார்க்கும் போது இறந்த மனிதனை பற்றி பேசி கொண்டிருந்தனர். அந்த மனிதன் இறந்த சமயத்தில் அவர்களும் அங்கே இருந்ததாக கூறப்படுகிறது”.

பொலிஸ் லெப்டினன்ட் கேணல் பொல்பத்தம் தம்மச்சாட் அறிக்கைகளிடம் கூறுகையில், “இரவு 8 மணியளவில் ஒரு ஷாப்பிங் மாலில் சினிமாவுக்குள் மரணம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இருந்து வெளிநாட்டு மனிதன் எப்படி இறந்தான் என்று தெரியவில்லை, ஆனால் மரணத்திற்கான உண்மையான காரணத்தை நிறுவ மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வார்கள். மரணத்துடன் தொடர்புடைய வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை “.இதுவரை, மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை.