HomeNews'சாஹோ' படத்தின் "காதல் சைக்கோ" பாடல் வெளியீடு!!

‘சாஹோ’ படத்தின் “காதல் சைக்கோ” பாடல் வெளியீடு!!

பாகுபலி இரண்டாம் பகை வெற்றியை தொடர்ந்து, பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்பை அதிகரிக்க செய்தது. சுஜித், இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை வம்சி மற்றும் ப்ரமோட் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார். இந்த படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடலின் டீஸர் அண்மையில் வெளியிட்டனர்.


Image result for saaho movie kadhal psycho

இந்த பாடலை தவானி பானுஷாலி பாடியுள்ளார் மற்றும் தனிஷ்க் பாக்சி இசையமைத்து எழுதியுள்ளார். மேலும், கூடுதல் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த படத்தின் முழு பாடல் ஜூலை 8ஆம் தேடி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று இந்த படத்தின் பாடலாம் டீ- சீரிஸ் வெளியிட்டது.





புகழ்பெற்ற இந்திய படமான சாஹோவில் ஜாக்கி ஷிராஃப், நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா, அருண் விஜய், பிரகாஷ் பெலவாடி, ஈவ்லின் சர்மா, சுப்ரீத், லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சாஹோ ஒரே நேரத்தில் 4 மொழிகளில் உருவாக்கப்படுகிறது – இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments