அதிக படங்கள் நடிக்கும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கில் ஒரு பெரிய பட்ஜெட் படமான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆனா அமிதாப் பச்சன் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் சேதுபதி தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் களமிறங்கியுள்ளார். ‘மார்கோனி மத்தாய்’ என்ற படத்தை சனில் கலதில் இயக்குகிறார், ஜெயராம் மற்றும் ஆத்மியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோவாக நடிக்கிறார்.
மார்கோனி மத்தாயின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சஜன் கலதில், இசை அமைப்பாளராக எம்.ஜெயச்சந்திரன், எடிட்டராக ஷமீர் முஹம்மது ஆகியோர் அடங்குவர்.
படத்தின் டிரைலர் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார் என்று யூகிக்கப்படுகிறது, மேலும் மூத்த நடிகர் ஜெயராம் இதில் பாதுகாப்பு காவலராக இருக்கும் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று தெறிகிறது. இந்த படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டார்.