பழம்பெரும் நடிகர் விஜயகுமார் என்பவரின் மகள் வனிதா விஜயகுமார், தற்போது பிரபல தொலைக்காட்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார், இந்த வார தலைவராக இவர் தேர்ந்தேடுக்கப்பட்டுளார்.
வனிதா விஜயகுமார் 2007 ல் ஆனந்தராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோவிதா ராஜன் என்ற மகள் இருக்கிறார். கருத்துவேறுபாடால் இருவரும் 2012 ல் விவாகரத்து பெற்ற பின், ஆனந்தராஜ் பிப்ரவரி 6ம் தேதி, ஐஐபிசி பிரிவு 363 கீழ் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்காக வனிதா விஜயகுமார் மீது FIR பதிவு செய்துள்ளார். இந்த புகார் ஐதராபாத் ஆல்வால் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் தனது மகளுடன் வசித்து வந்த ஆனந்தராஜ், பிப்ரவரி 6ம் தேதி தனது மகள் பள்ளிக்கு செல்லும் வழியில் காணாமல் போனார் என்றும், இந்த பிரச்சனை தொடர்பாக வனிதா விஜயகுமார் மீது புகார் பதிவு செய்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை போலீசாரிடம் உதவி கோரியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நசரெத்தபேட்டை காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டபோது, ஆனந்தராஜ் வழக்கு தொடர்ந்ததை உறுதி செய்தனர். மேலும், ஈ. வி. பி. பிலிம் நகரில் தற்போது பிக் பாஸ் ஹவுஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணை நடக்கும் என்றும், அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.