நடிகர் விஜய் சேதுபதி-த்ரிஷா கூட்டணியில் நடித்து வெளிவந்த ’96’ படம் மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றது. இந்த படமும் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது, அந்நிலையில் விஜய் சேதுபதி முன்வந்து படத்தின் வெளியீட்டிற்கான பணத்தை தந்து ’96’ படத்தை வெளியிட உதவினார்.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளிவந்த சிந்துபாத் படமும் பைனான்ஸ் பிரச்சனைகளால் சிக்கியது. ஆரம்பத்தில் பைனான்ஸ் பிரச்சனைக்கு உதவிய விஜய் சேதுபதி, தொடர்ந்து படம் வெளியீட்டில் சிக்கல் வருவதால் அவரால் உதவ முடியாமல் போனது.
இதனால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை யுவன் ஷங்கரிடம் வந்த பொது, யுவன் ஒரு கோடி ரூபாய் தயாரிப்பாளரிடம் கொடுத்து, சிந்துபாத் வெளியீட்டிற்கு உதவினார்.
இதுபோன்று பல தயாரிப்பாளர்களுக்கு, யுவனின் தந்தை இசைஞானி இளையராஜா உதவினார் என்று அவரது 75வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினி குறிப்பிட்டு பேசியிருந்தார். யுவனின் இந்த உதவியால் சிந்துபாத் படம் ஒருவழியாக இன்று ரிலீஸானது.