வி கிரியேஷன்ஸ் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ‘அசுரன்’ .இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்தது .இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது . அதற்கான லொகேஷன் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது .இந்த படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷின் மகனாக கருணாஸ் அவர்களின் மகன் கென் கருணாஸ் நடித்துள்ளார். நேற்று ஜி. வி. பிரகாஷ் டுவிட்டர் பக்கத்தில் ‘பொல்லாத பூமி’ பாடல் பதிவு என பதிவிட்டு செல்பி ஒன்றை பகிர்ந்து உள்ளார். இந்த பாடலை தனுஷ் அவர்களும் கருணாஸ் மகன் கென் கருணாஸ், டீஜே அவர்களும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாட்டிற்கு யுவபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இதை தவிர்த்து தனுஷ் அவர்கள் துரை செந்தில் இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார்.


























